
அமிர்தமாக இருந்தாலும். அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சுதான். அந்த வகையில் வெந்தயமும் கூட அப்படித்தான். வெந்தயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மூலிகை குணம் கொண்ட வெந்தய விதைகளும் வெந்தய இலைகளும் ஆண்டுக்கணக்காக பயன்படுத்திவருகிறோம். சமையலில் பயன்படுத்தப்படும் இந்த பொருளின் மருத்துவ நன்மைகள் குறித்த விழிப்புணர்வால் அதிக அளவு பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். இந்நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்தினால் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கவும் செய்கிறது. அன்றாடம் எடுத்துகொள்ளலாம் என்றாலும் எவ்வளவு எடுத்துகொள்ளலாம், அதிகமானால் என்னமாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
ஆரோக்கிய குறைபாடு இருக்கும் போது
ஆரோக்கிய குறைபாடு இருக்கும் போது வெந்தயத்தை தனித்து பயன்படுத்துவது நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் பாதிப்பில்லாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். வெந்தயம் குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுஇருக்கும் காலங்களில் இதை எடுத்துகொண்டால் இவை மூச்சுத்திணற பிரச்சனையை உண்டு செய்யும்.
குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. உணவில் சேர்த்து பயன்படுத்தும் போது பிரச்சனை நேராது. ஆனால் தனித்து சருமத்துக்கு, கூந்தலுக்கு உள்ளுக்கு என்று எடுக்கும் போது இதன் குளுமை உடலில் அதிகரிக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கை வைத்திய முறையில் வெந்தயத்துக்கும் பங்குண்டு என்றாலும் தானாக பயன்படுத்த கூடாது